காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி 20, 21ம் தேதி தேர்தல் பிரச்சாரம்: அதிமுக தலைமை அறிவிப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி 20, 21ம் தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இது குறித்து அதிமுக தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 20ம் தேதி புதன் கிழமை-காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 9 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, 9.45 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் பொதுக்கூட்டம் பங்கேற்கிறார்.

காலை 11.30 மணிக்கு வாலாஜாபாத் பேருந்து நிலையம் வரவேற்பு, 12.30 மணிக்கு அண்ணா நினைவு இல்லம் மரியாதை செலுத்துதல், 1 மணிக்கு காந்தி சாலை, தேரடி வரவேற்பு, பிற்பகல் 1.45 மணிக்கு ஜென்சி காஞ்சிபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டல் நெசவாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பிரமுகர்களுடன் சந்திப்பு, 4.15 உத்திரமேரூர் பேருந்து நிலையம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுடன் சந்திப்பு, மாலை 5.30 மணிக்கு செங்கல்பட்டு பஸ் டிப்போ முதல் செங்கல்பட்டு காவல் நிலையம் வரை சாலை மார்க்கமாக பிரச்சாரம் அதை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

பின்னர் 7 மணிக்கு கே.ஆர்.ஜி திருமண மண்டபம், சிங்கபெருமாள்கோவில் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளுடன் சந்திப்பு இரவு 8 மணிக்கு பார்ச்சூன் ஓட்டல், சிங்க பெருமாள் கோவில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் சந்திப்பு. பின்னர் 21ம் தேதி வியாழக் கிழமை-செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 9 மணிக்கு திருப்போரூர் பேருந்து நிலையம் பொதுக்கூட்டம், 10.30 மணிக்கு புதுப்பட்டினம் குப்பம்    மீனவர்களுடன் சந்திப்பு, 11.45 மணிக்கு செய்யூர் பேருந்து நிலையம் வரவேற்பு, பிற்பகல் 2.15 மணிக்கு மதுராந்தகம் பேருந்து நிலையம், தேரடி    கரும்பு, பருத்தி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுடன் சந்திப்பு, மாலை 4க்கு தாம்பரம் சந்திப்பு முதல் சண்முகம் சாலை வரை    சாலை மார்க்கமாக பிரச்சாரம். அதை தொடர்ந்து பொதுக்கூட்டம், மாலை 5.45 மணிக்கு பல்லாவரம் நகரம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பு நடைபெறும்.

Related Stories: