ம.பியில் 2 முறை கடத்தி கொடூரம் 13 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்த கும்பல்: 7 பேர் கைது

உமாரியா: மத்தியப் பிரதேச மாநிலம், உமாரியா நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. கடந்த 4ம் தேதி மார்க்கெட்டுக்கு தனியாக சென்ற இவரை, அடையாளம் தெரியாத கும்பல் கடத்தி சென்று 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், 5ம் தேதி சிறுமியை விடுவித்துள்ளனர். இது பற்றி வீட்டில் யாரிடமாவது கூறினால், கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்நிலையில், கடந்த 11ம் தேதி சிறுமி மீண்டும் கடத்தப்பட்டு, 2 நாட்களாக கும்பல் பலாதகாரம் செய்தது. இது பற்றி விசாரித்த போலீசார், 7 பே்ரை வெள்ளியன்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>