எந்தவித கண்காணிப்போ,கட்டுப்பாடோ இல்லாமல் அரங்கேறும் அசிங்கங்கள் சமூக வலைதளமா... ஆபாச களமா? கடுமையான தண்டனைகளுடன் சட்டம் கொண்டு வருமா மத்திய அரசு

தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி, உலகையே இன்று நம் கைக்குள் அடக்கி விட்டது. உலக நடப்புகளை அடுத்த நொடியே நம் செல்போனில் பார்க்கும் அளவுக்கு இந்த வளர்ச்சி உள்ளது. ஆனால், இந்த நவீன தொழில்நுட்பம், நன்மையை விட தீமைக்காக அதிகம் பயன்படுத்தப்படுவதுதான் சோகம். இணைய உலகில் நல்லது 10 நடந்தால், கெட்டது 100 நடக்கிறது. காரணம், எந்த கட்டுப்பாடும் இல்லாததுதான். தங்கள் இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம் என்பதுதான் உண்மை நிலை. இணையத்தில் உலா வரும் சேனல்களை கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ எந்த அமைப்பும் இல்லை. விளைவு... இன்றைக்கு இணையதளங்கள் பெரும்பாலும் ஆபாசக் களங்களாக மாறிவிட்டன என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அண்மையில் சென்னை டாக்ஸ்’ என்ற யூ-டியூப் சேனல் சர்ச்சையில் சிக்கியது, இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கிறது. சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளம் பெண்கள் மற்றும் காதலர்களை மட்டும் குறிவைத்து ஆபாசமாக பேட்டி எடுத்து அதை அவர்களின் அனுமதி இல்லாமல் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளனர். இப்படி ஆபாசமாக பேட்டிக் கொடுத்த பெண் ஒருவரே போலீசில் புகார் தர யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களை போல் ஓராயிரம் பேர் வெளியே சுதந்திரமாக ஆபாசத்தை இணையத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இதுபோன்ற ஆபாசங்களை கண்காணித்து கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்? கடுமையான தண்டனை விதிக்கக் கூடிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தால் தீர்வு ஏற்படுமா? இதில், சமூகத்தின் கடமை என்ன? இதோ நான்கு கோண அலசல்.

Related Stories:

>