யூடியூப் சேனல்கள் எல்லைமீறி செயல்படுகின்றன: எஸ்.பிரபாகரன்,மூத்த வக்கீல், அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவர்

யூடியூப் சேனல்கள் நல்ல விஷயங்களை கொடுக்க வேண்டும். ஆனால், விளம்பரம் வர வேண்டும், பணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் ஆபாசமான வார்த்தைகள் அடங்கிய விஷயங்களை பதிவிட்டு வருகிறார்கள். அனைவரும் முகம் சுழிக்க வைக்கும் வகையிலான வார்த்தைகளில் பேசி அதை பதிவிடுகிறார்கள். இதேபோல் தனிப்பட்ட நபர்களை மிரட்டுவதற்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. ஐடி டெக்னாலஜி சட்டத்தின் படி இதுபோன்ற ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோக்கள் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அவர்களின் வீடியோக்களை பறிமுதல் செய்யலாம்.

இதேபோல், யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களும் இதுபோன்ற வீடியோக்களை பதிவிடக்கூடாது. சட்டத்திற்கு எதிராக தவறு செய்பவர்களை யூடியூப் சேனல்கள் எப்படி வெளிக்காட்ட முடியும். மேலும், யூடியூப் சேனலை யார் தவறாக பயன்படுத்துகிறார்களோ அவர்கள் மீதும் புகார் அளிக்கலாம். கடந்த ஒரு வருடமாக யூடியூப் சேனல்கள் எல்லை மீறி செயல்படுவதை பார்க்க முடிகிறது. ஆபாச கேள்விகளை கேட்டு அதை பதிவிடுவது, ஆபாச வீடியோக்களை பதிவிடுவது போன்றவற்றை காண முடிகிறது.

இது மிகவும் தவறான ஒன்று. அரசு உடனடியாக இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. அரசாங்கம் நேரடியாகவோ அல்லது காவல்துறை மூலமாகவோ இதுபோன்ற வீடியோக்களை அகற்றுவதற்கும் குறிப்பிட்ட யூடியூப் சேனலை முடக்குவதற்கும் அதிகாரம் உள்ளது. யூடியூப் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுகிறது. அதை நாம் தவிர்க்க முடியாது. அதேபோல், இதுபோன்ற எதிர்மறையான விஷயங்களுக்கும் பயன்படுகிறது. இதை மறுக்க முடியாது.

தவறான விஷயங்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக நடவடிக்கையும் எடுக்க வேண்டும். 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். தவறான பாதையில் செல்லவும் கூடாது, அதை அங்கீகரிக்கவும் கூடாது. தற்போது, நீதிமன்றம் சென்று தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. எனவே, பொதுவான விதிமுறைகளை யூடியூப் நிர்வாகத்தினர் அவர்களுக்குள் கொண்டுவர வேண்டும். அதற்குட்பட்ட வீடியோக்களை மட்டுமே ஏற்க வேண்டும். மற்ற வீடியோக்கள் பதிவிடுவதை வரவேற்கக்கூடாது.

தவறான விஷயங்கள் சமூக ஊடகங்களில் பரவும் போது அதை உடனே கண்டறிந்து மாநகர காவல்துறையும் நடவடிக்கை எடுக்கலாம். பொதுவெளியில் பேசுவதற்கு வரைமுறை என்பது கிடையாது. ஆனால், ஆபாசமான வார்த்தையை பேசுவது பேச்சு சுதந்திரம் கிடையாது. தரக்குறைவாக, ஆபாசமான வார்த்தைகளை பொதுவெளியில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அப்படி பேசுபவர்கள் மீது வழக்கு தொடரலாம். உங்களுடைய பேச்சுரிமை என்பது மக்களின் நலன்களையோ, அவர்களின் உரிமைகளையோ பாதிக்கும் வகையில் இருக்ககூடாது. தரக்குறைவான கேள்விகளை கேட்பதும் அதை வெளியிடுவதும் தவறு. தனிப்பட்ட நபர்களை மிரட்டுவதற்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. ஐடி டெக்னாலஜி சட்டத்தின்படி இதுபோன்ற ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோக்கள் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அவர்களின் வீடியோக்களை பறிமுதல் செய்யலாம்.’’

* அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்: அபி சங்கரி, உளவியல் ஆலோசகர்

யூடியூப்பில் வரும் ஆபாச பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் குழந்தைகளை அதிக அளவில் பாதிப்புக்கு ஆளாக்குகிறது. குறிப்பாக, யூடியூப் நிர்வாகம் வெறுப்பு கலந்த பேச்சு, ஆபாசமான வீடியோ, ஆபாசமான பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களை ஏற்றுகொள்ள மாட்டார்கள். அதுகுறித்த புகார்கள் வரும் போது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். யூடியூப் செயலியிலேயே இந்த விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக 2 விஷயங்கள் இதில் உள்ளது. அது, நாம் போடும் வீடியோவிற்கான பதிவு சரியில்லை என்றால் அதை எடுத்துவிடலாம். மற்றொன்று கான்டாக்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்.

இது யூடியூப் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படும் விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் ஆகும். ஆனால், இதை எல்லாம் தாண்டி விதிகளை மீறிய வீடியோக்கள் வருவதை காண முடிகிறது. ஒரு வீடியோவை நீக்கம் செய்வதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளது. குறிப்பிட்ட குழுவிடம் வீடியோ குறித்த புகார் கொடுக்கப்பட்டு அது பல கட்ட ஆலோசனைக்கு பிறகே நீக்கம் செய்யப்படும். ஒரு வீடியோ ஆபாசமாக இருந்தாலே அதன் உள்ளே சென்று பார்ப்பதை நாம் தவிர்த்து விடலாம். இதேபோல், அரசு சார்பில் எந்தெந்த விஷயங்களை பதிவிட வேண்டும். எந்தெந்த விஷயங்களை பதிவிட கூடாது என்பன போன்ற விதிகளை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்தலாம்.

யூடியூப் சேனல் வைத்திருப்போர் எல்லை மீறி செயல்படும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அதனால் பாதிக்கப்படுவார்கள். பொதுமக்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். உளவியல் ரீதியாகவும் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற விஷயங்களை வீடியோக்கள் பதிவிடும் நபர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. விரைவில் பிரபலம் ஆகிவிட வேண்டும் என்று நினைத்துத்தான் வீடியோக்களை பதிவிடுகிறார்கள். டிக்டாக், யூடியூப் போன்றவற்றில் வரும் வீடியோக்கள் மூலமாக பலர் தன்னுடைய உயிரையே மாய்த்துக்கொண்டுள்ளார்கள்.

தவறான வீடியோ ஒன்று கண்ணுக்கு படும்போது அதை கடந்து செல்லாமல் அந்த வீடியோ குறித்து யூடியூப் நிர்வாகத்துக்கு கண்டிப்பாக புகார் அளிக்க வேண்டும். இதற்கான சரியான முடிவை அரசு எடுக்க வேண்டும். ஆபாச வார்த்தைகள் அடங்கிய வீடியோக்களை பதிவிடாத வகையில் விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும். வீடுகளில் உள்ளவர்களும் தங்களுடைய குழந்தைகள் செல்போனில் என்ன பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர்களும் கவனிக்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு அனைவரிடத்திலும் வரவேண்டியது அவசியம்.

கொரோனா காலத்தில் ஆன்லைனில் தான் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதுபோன்ற சூழலில் குழந்தைகளுக்கு எளிதாக இதுபோன்ற வீடியோக்கள் சென்றடைந்துவிடுகிறது. எனவே, பெற்றோர்கள் மிகவும் கவனமாக இதை கண்காணிக்க வேண்டும். யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களும் அனைவருக்கும் உபயோகமாக இருக்ககூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். சமூகத்திற்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். பிரதிபலனை பார்த்து செயல்படுவது தவறு. இதை தாண்டும் போது தான் பிரச்னை எழுகிறது. கொரோனா காலத்தில் ஆன்லைனில் தான் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதுபோன்ற சூழலில் குழந்தைகளுக்கு எளிதாக இதுபோன்ற வீடியோக்கள் சென்றடைந்துவிடுகிறது. எனவே, பெற்றோர்கள் மிகவும் கவனமாக இதை கண்காணிக்க வேண்டும்.’’

Related Stories: