×

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார துறை செயலாளர்

திருச்சி: திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 2வது நாளாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அனைவருக்கும் விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தானும் தடுப்பூசி செலுத்தி கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தடுப்பூசி போட்ட யாருக்கும் இதுவரை பக்க விளைவுகள் வரவில்லை. அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியம் ஆக்க வேண்டும் என்றார்.

Tags : Department of Health , Secretary of the Department of Health vaccinated against corona
× RELATED கோவிட்கேர் மையங்களில் 4 ஆயிரம்...