×

புதுச்சேரி பாஜ நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் மரணம்

புதுச்சேரி: புதுச்சேரி, இளங்கோ நகரில் வசித்தவர் சங்கர் (70). பாஜக மாநில பொருளாளரான இவர் கடந்த 2017 ஜூலை 5ம்தேதி நியமன எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதய நோயால் பாதிக்கப்பட்ட சங்கர், சமீபகாலமாக கட்சி நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்க சென்ற சங்கர் நேற்று காலை 7.30 மணிவரை கண்விழிக்கவில்லை. அவரை மனைவி பிரேம லலிதா, உறவினர்கள் எழுப்பியபோது, எழுந்திருக்கவில்லை. மாரடைப்பு காரணமாக படுக்கையிலேயே உயிர் பிரிந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் விபி சிவக்கொழுந்து, மாநில பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். மறைந்த நியமன எம்எல்ஏ சங்கருக்கு மனைவி மற்றும், சித்தார்த் என்ற மகனும், சஜிதா என்ற மகளும் உள்ளனர்.

Tags : MLA Shankar ,BJP ,Puducherry , Puducherry BJP nominee MLA Shankar dies of heart attack
× RELATED பாஜகவில் சேர்ந்தார் மெட்ரோ மேனின் ஐகான் பதவி பறிப்பு