×

கன்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த யானை சாவு

ஓசூர்: கிருஷ்ணகிரி  மாவட்டம், ஓசூர் சானமாவு பகுதியில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஒற்றை யானை கன்டெய்னர் லாரி மோதி படுகாயம் அடைந்தது. அந்த யானையை வனத்துறையினர் மீட்டு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. பிரேதப் பரிசோதனைக்குப்பின் அங்கேயே அடக்கம் செய்தனர். இதையடுத்து கன்டெய்னர் டிரைவரான சோலைமுத்துவை போலீசார் கைது செய்தனர்.


Tags : Elephant killed in container truck collision
× RELATED இரு மாநில எல்லை சோதனைச்சாவடியில்...