வடிகால்வாய் இல்லாததால் தெருவில் ஓடும் கழிவுநீர்: நோய் பரவும் அச்சத்தில் மக்கள்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது கிழ்ஒட்டிவாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் இங்குமழைநீர்வடிகால்வாய் இல்லை. இதனால் மழை காலங்களில் தெருக்கள் முழுவதும்  தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகின்றன. இவை மட்டுமின்றி வீட்டின் உபயோகத்திற்கு பயன்படும் தண்ணீரும் சாலையிலேயே செல்கின்றன. இதனால் கொசு உற்பத்தி மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இப்பகுதியில் நிலவுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்ஒட்டிவாக்கம் ஊராட்சியில் மழைநீர்வடிகால்வாய் இல்லாததால் மழை காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி தெருக்கள் முழுவதும் ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நிற்கிறது. மேலும் வீடுகளில் உபயோகப்படும் நீரும் சாலையிலேயே செல்கிறது. இதனால் கொசு உற்பத்தியும் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுகின்றன. மேலும் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Related Stories: