தமிழக அரசின் சார்பில் வெளிநாடுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் தகவல்

வாணியம்பாடி: தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் கீழ்க்கண்ட வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன் விவரம் வருமாறு: கே.எம்.எஸ் கத்தார் மெடிக்கல் சென்டரில் ஆண் மற்றும் பெண் டெக்னீஷியன்கள் 50 பேர். மாதசம்பளம் 72,000 வரை வழங்கப்படும். ஸ்டாப் செவிலியர் படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.

அயர்லாந்து ரீகொயர்மென்ட் நிறுவனத்தில் ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 40 பேர் தேவை. மாத சம்பளம் 2.5 லட்சம் வரை. இங்கிலாந்து தேசிய சுகாதார மையம் சார்பில் பணியாற்ற ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 100 நபர்கள் தேவை. மாத சம்பளம் 2.5 லட்சம் வரை வழங்கப்படும். கத்தார் நாட்டில் உள்ள தோகா கத்தார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்ற பிஎஸ்சி முடித்த பெண்கள் 15 நபர்கள் தேவை. மாத சம்பளம் 70 ஆயிரம்.

ஓமன் நாடு டீனஸ் ஓமன் எல்எல்சி நிறுவனத்தில் டர்னர், பிட்டர், மெக்கானிஸ்ட் மற்றும் மெக்கானிக் 20 நபர்கள் தேவை. மாத சம்பளம் 29 ஆயிரம் வரை என வெளிநாடுகளில் நேரடியாகவும், இந்தியாவில் ஆந்திர மாநிலம், நாயுடுபேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரேக்ஸ் இந்தியா லிமிடெட் (டிவிஎஸ்) நிறுவனத்தில் பணியாற்ற ஆபரேட்டர்கள் 200 நபர்கள் தேவை. மாத சம்பளம் 12,000 வரை உள்ளது. இதில் ஆந்திராவில் உள்ள நிறுவனங்களில் ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியவேண்டும். உணவு, தங்குமிடம் இலவசம். வாரம் 6 நாட்கள் வேலை 8 மணி நேரம் ஷிப்ட் முறையில் பணியாற்ற வேண்டும்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சிப்காட்டில் 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற பெண் மற்றும் ஆண் 40 நபர்களுக்கு சிஎன்சி மில்லிங், வெல்டிங் டிரெய்னிங் மற்றும் சாப்ட் ஸ்கில்ஸ் ஆகியவற்றில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. உணவு, தங்குமிடம் இலவசம். இந்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி குறித்து விளக்கமாக தெரிந்து கொள்ள 9176434488 மற்றும் 8667407470 ஆகிய தொலைபேசி எண்ணுக்கும், ovemcl@gmail.com. என்ற மெயில் மற்றும் www.omcmanpower.com. இணையத்தில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>