நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை  2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 2-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 2847 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 282 பேர் போட்டுக்கொண்டனர். அதிகபட்சமாக ஆந்திராவில் 308, தமிழகத்தில் 165, கர்நாடகாவில் 64 அமர்வுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

553 அமர்வுகளில், மொத்தம் 17,072 பயனாளிகளுக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம் 2,24,301 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், இன்று 6 மாநிலங்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி மையங்களை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தடுப்பூசி திட்டம் போட தொடங்கிய நேற்று மற்றும் இன்றைய தினங்களில்  447 பேருக்கு பக்கவிளைவு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் மூன்று பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனாவுக்கு எதிராக ஒரே நாளில் அதிகபட்சமாக 2,07,229 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது உலகின் மிக உயர்ந்த தடுப்பூசி எண்ணிக்கையாகும். முதல் நாளில் அதிகபட்சமாக போடப்பட்ட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை விட உயர்ந்தது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

>