×

தமிழகத்தில் தாமரை மலர்ந்தது போன்று முக மலர்ச்சியோடு கொரோனா தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும் : ஆளுநர் தமிழிசை

சென்னை: தமிழகத்தில் தாமரை மலர்ந்தது போன்று முக மலர்ச்சியோடு கொரோனா தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழிசை செளந்தரராஜன்தமது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினார். அப்போது, பொங்கலோ பொங்கல்! பாதுகாப்பான பொங்கல், பாதுகாப்பான தடுப்பூசி பொங்கல், கொரோனாவை விரட்டும் பொங்கல் என தமிழிசை செளந்தரராஜன் முழக்கமிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது: தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகே தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும். பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்குகிறது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளும் பாதுகாப்பானது தான் என்பதை உறுதியாக கூறுகிறேன். தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நான் நேரில் சென்று பார்த்துள்ளேன்.மக்களோடு மக்களாக நானும் மாநிலத்தின் முதல் குடிமகன் என்கிற அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்வேன். தமிழகத்தில் தாமரை மலர்ந்தது போன்று முக மலர்ச்சியோடு தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும், இவ்வாறு தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

Tags : Tamilisai ,Tamil Nadu , தமிழிசை
× RELATED கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை