3 வெவ்வேறு சம்பவத்தில் 13 வயது சிறுமி 12 மனித மிருகங்களால் பலாத்காரம் : மத்திய பிரதேசத்தில் கொடூரம்

போபால் : மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமியை மூன்று சம்பவத்தில் அடுத்தடுத்து 12 பேர் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்துள்ள  கொடூரம் நடந்து உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தினைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அவருக்கு அறிமுகமான இளைஞர் ஒருவர் கடந்த 4ம் தேதியன்று கடத்திச் சென்றுள்ளார். அச்சிறுமியை அந்த இளைஞரும் அவரின் 6 நண்பர்களும் சேர்ந்து இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். சிறுமியை இரண்டு நாட்களுக்கு பின்னர் விடுவித்த அந்த கும்பல், இது தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால், அந்த சிறுமி நடந்த சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டுக்கு சென்று விட்டார்.

இரண்டு நாட்களுக்கு பின்னர் அவளை பாலியல் வன்புணர்வு செய்த 7 பேரில் ஒருவன். மீண்டும் அச்சிறுமியை கடத்திச் சென்றான். அவன்,  காட்டுப் பகுதியிலும், சாலையோர கடை ஒன்றிலும் வைத்து அவனது 3 நண்பர்களும் இணைந்து மீண்டும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். பின்னர் அச்சிறுமியை அந்த 3 பேரும் தங்கள் பிடியில் இருந்து விடுவித்தனர். ஆனால் அச்சிறுமிக்கு ஏற்பட்ட பயங்கரம் அத்துடன் முடிவடையவில்லை.தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை லாரி டிரைவர்கள் இருவர் மீண்டும் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அவர்கள் பிடியில் இருந்து தப்பிய சிறுமி வீட்டுக்கு திரும்பி வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

அதில், மூன்று சம்பவத்தில் 12 பேர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் இதுவரை குற்றவாளிகள் 6 பேரை கைது செய்து அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>