இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து 3 நாட்களுக்கு முன்பே பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு தெரிந்தது எப்படி : ப சிதம்பரம்

டெல்லி : இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து 3 நாட்களுக்கு முன்பே பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு தெரிந்தது எப்படி என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2019ல் பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பாலக்கோடு தீவிரவாத முகாம் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஆனால் அந்த தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்னரே அது குறித்து  எக்ஸ் - BARC சிஇஓவிடம் பத்திரிகையாளர் அர்னாப் வாட்ஸ்- அப்பில் விவாதித்தது தொடர்பான ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ட்விட்டர் பதிவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டேக் செய்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் 3 நாட்களுக்கு முன்பாகவே பாலக்கோட் தாக்குதல் பற்றி பத்திரிகையாளருக்கும் அவரது நண்பர்களுக்கும் முன்கூட்டியே தெரியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர்களுக்கு தெரியும் என்றால் அவர்களுக்கு தகவலை கூறிய நபர்கள் பாகிஸ்தான் உளவாளிகள் உட்பட பிறருக்கு அதனை பகிரவில்லை என்ன உத்தரவாதம் என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் நேரடி பார்வையில் நடந்த ஒரு தாக்குதல் அரசை ஆதரிக்கும் ஒரு பத்திரிகையாளருக்கு எப்படி தெரிந்தது என்றும் ப. சிதம்பரம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.  

Related Stories:

>