×

ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் ... புது குண்டை தூக்கிப்போடும் சீனா : சாப்பிட்டவர்களை தேடும் அதிகாரிகள்

பெய்ஜிங்: சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் கிழக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கின் அருகில் தியான்ஜினில் உள்ள தாகியோடாவ் ஃபுட் கோ நிறுவனத்தில் இந்த ஐஸ்கிரீம்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த நிறுவனத்தில் இருந்து சுமார் 4,836 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனம் சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் 1,600 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 700 ஊழியர்களின் சோதனை முடிவுகள் நெகடிவாக உள்ளன. இந்த நிறுவனத்தில் இருந்து 1912 ஐஸ் கிரீம் பெட்டிகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதனை சாப்பிட்டவர்கள் யார் யார் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டு வருகின்றனர்.



Tags : China , Ice cream, corona, virus
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...