×

கொரோனா பாதிப்பை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவதே தமிழக அரசின் இலக்கு : தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் ராதாகிருஷ்ணன் பேட்டி

திருச்சி: கொரோனா பாதிப்பை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவதே தமிழக அரசின் இலக்கு என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.  கொரோனா தெற்றுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாடு முழுவதும் நேற்று தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 166 முகாம்களில் நேற்று காலை துவங்கியது. அவ்வகையில், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இன்று 2வது நாளாக கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசியினை போட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவுக்காக போடப்படும் 2 தடுப்பூசிகளுமே மிகவும் பாதுகாப்பானது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தடுப்பூசி நோய் தடுப்புக்கான மிக முக்கியமான ஒரு மைல் கல்.இதுவரை தடுப்பூசி போட்ட யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை. முதல் நாளான நேற்று மதுரையில் அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளனர். மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட 6 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். கொரோனா பாதிப்பை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவதே தமிழக அரசின் இலக்கு.3ம் கட்டமாக 50 வயதிற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.தடுப்பூசி செலுத்தும்போதும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்,என்றார்.


Tags : government ,Tamil Nadu ,Radhakrishnan , Corona, Vaccine, Radhakrishnan, Interview
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...