×

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ரூ.1 லட்சம் நிதியுதவி :அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!!

வாஷிங்டன் : ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கும் சிறப்பு திட்டத்தை அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக் காலம் இன்னும் 3 நாட்களில் முடிகிறது. வருகிற 29ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் கொரோனா தாக்கத்தில் இருந்து பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான சிறப்பு திட்டத்தை அவர் வெளியிட்டுள்ளார்.  இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.138 லட்சத்து 811 கோடியாகும்.

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ரூ.1 லட்சம் நிதியுதவி கிடைக்கும். கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை வாரம் ரூ.29 ஆயிரமாக உயர்த்தப்படும்.இந்தத் திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்‍காவில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,41,02,429 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 4 லட்சத்து 1 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Joe Biden ,US , Joe Biden
× RELATED கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது...