ஆண்டிபட்டி: கொடைக்கானலில் மழை குறைந்ததால் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது. விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலாப்பயணிகள், பல்வேறு இடங்களை கண்டுகளித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படுகிறது. கடந்த 4 நாட்களாக நகர் பகுதியில் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் பொங்கல் விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தது. நேற்று முன்தினம் மாலை முதல் மழை குறைய தொடங்கியது. இதனால் நகர் இயல்பு நிலைக்கு திரும்பியது. மழை இல்லாமல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.