வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் எம்.ஜி.ஆர். பல முயற்சிகளை தொடங்கினார் : பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி : மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்சும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அவரவர் இல்லங்களில் எம்.ஜி.ஆரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு,  சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும்  மரியாதை செலுத்தினர்.

அவர்கள் இருவரும் அதிமுக கொடியையும் ஏற்றி வைத்தனர். பலராலும் போற்றப்பட்ட எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை, அரசியல் தலைவர்கள் பலர் நினைவு கூர்ந்துள்ளனர். அந்த வகையில் அதிமுக அரசுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக தலைவரும் பிரதமருமான மோடி, ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த பதிவில், ‘பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம்’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: