30 நிமிடத்தில் ரூ.3,000 சம்பாதிக்கலாம் : மோசடி கும்பல் 12 பேர் கைது

புதுடெல்லி:டெல்லியில் உள்ள சைபர் கிரைம் போலீசார் மோசடி கும்பலைச் சேர்ந்த 12 பேரை கைது செய்துள்ளனர்.பல்வேறு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகள் மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை டெல்லி சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர். ‘30 நிமிடத்தில் 3 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்’ என்று ஆசை காட்டி பலரிடம் ஒரு கும்பல் பணம் வசூலித்து ஆன்லைனில் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக பிரபலங்களின் பெயரில் போலிக் கணக்குகளை உருவாக்கி இந்த மோசடியை செய்து வந்துள்ளனர். அதையடுத்து டுவிட்டர், வாட்ஸ் ஆப், யூடியூப் மூலம் மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டை சேர்ந்த 2 பேர் உட்பட 12 பேரை டெல்லி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>