தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

தெலுங்கானா: தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கூறினார். தடுப்பூசியின் அவசியத்தை உணர வேண்டும் என தெரிவித்தார். பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்குகிறது எனவும், தடுப்பூசிகளும் பாதுகாப்பானது தான் என்பதை உறுதியாக கூறுகிறேன் என கூறினார். தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நான் நேரில் சென்று பார்த்துள்ளேன் என தெரிவித்தார்.

Related Stories:

>