கோரிக்கைகளை நிறைவேற்றாததால் எங்களுக்கு தடுப்பூசி வேண்டாம் : ஒடிசா சுகாதார பணியாளர்கள் முடிவு

புவனேஸ்வர்:பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததால் நாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம் என்று ஒடிசா சுகாதார பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் 160க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்நிலையில், ஒடிசா மாநில பல்நோக்கு சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களின் ஐக்கிய சங்க பொதுச் செயலாளர் ரவீந்திர நாத் பிரதான் கூறுகையில், ‘ஒடிசா மாநில அரசு மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பணியாளர் செவிலியர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக எங்களது பல்வேறு ேகாரிக்கை தொடர்பாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஒரே நேரத்தில் சேர்ந்த மற்ற அரசு ஊழியர்களுக்கும் ஐந்து முதல் ஏழு முறை பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஒரு முறை மட்டுமே பதவி உயர்வு கிடைத்துள்ளது. தொற்று பரவல் காலத்தில், சுகாதார ஊழியர்கள் அயராது உழைத்தனர். பராமரிப்பு மையங்களை பாதுகாத்தோம். ஆனால், இன்று நாங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். எங்களது கோரிக்கை தொடர்பாக அரசுக்கு கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை எழுத்துப்பூர்வ கோரிக்கை அனுப்பினோம். ஆனால் எங்களது விவகாரம் குறித்து மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுவோம். ஆனால், நாங்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள மாட்டோம்’ என்றார்.

Related Stories:

>