×

பஞ்சாபிகளின் போராட்டம் குறித்து முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம் : ராகுலுக்கு மாஜி அமைச்சர் சூடான கேள்வி

சண்டிகர்:பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் குறித்து முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம் என்று ராகுல் காந்திக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் சூடான கேள்விகளை எழுப்பி உள்ளார். ேவளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அகாலி தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் வௌிட்ட டுவிட்டர் பதிவில், ‘பஞ்சாபியை காலிஸ்தானி என்று அழைப்பதற்கு ராகுல்காந்தி ஏன் முதலை கண்ணீர் வடிக்கிறார். உங்களது பாட்டி (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி) பஞ்சாபியர்கள் ஏன் அந்த வார்த்தையில் பேசினார் என்பதை நீங்கள் விளக்க வேண்டும். உங்களது தந்தை (முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி) ஏன் பஞ்சாபியர்களைக் கொல்ல அனுமதித்தார்? பஞ்சாபியர்களை போதைக்கு அடிமையானவர்கள் என்று ஏன் அழைக்கிறீர்கள்?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் உங்களிடம் இருக்கும் பட்சத்தில், பஞ்சாப் விவசாயிகளைப் பற்றி பேசுங்கள். மத்திய அரசு விவசாய சட்டங்களை இயற்றப்படும்போது ராகுல் காந்தி எங்கே போனார்? விவசாயிகள் பஞ்சாபில் தர்ணா நடத்தும்போது ராகுல் காந்தி எங்கே போனார்? வேளாண் சட்டங்களை இயற்றும் போது 40 காங்கிரஸ் எம்பிக்களும் மாநிலங்களவையில் இருந்து ஏன் வெளியேறவில்லை? காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய அரசை ஏன் சந்தித்தார்? தனது பாவங்களை செயற்கையான அனுதாபத்தால் கழுவிவிடலாம் என்று ராகுல்காந்தி நினைக்கிறாரா?’ என்று சூடான கேள்விகளை எழுப்பி உள்ளார்.


Tags : Punjabis ,Rahul , Rahul Gandhi
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...