×

அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பலி.. உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது... திணறும் உலக நாடுகள்

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருகிறது.தற்போதைய நிலவரப்படி, 9 கோடியே 49 லட்சத்து 21 ஆயிரத்து 985 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வைரஸ் பரவியவர்களில் 2 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரத்து 404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 601 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.கொரோனாவில் இருந்து 6 கோடியே 75 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 29 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 4,05,254
பிரேசில் - 2,09,350
இந்தியா - 1,52,093
மெக்சிகோ - 1,39,022
இங்கிலாந்து - 88,590
இத்தாலி - 81,800
பிரான்ஸ் - 70,142
ரஷியா - 65,085

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா - 1,43,43,612
இந்தியா - 1,01,79,715
பிரேசில் - 73,88,784
ரஷியா - 29,36,991
துருக்கி - 22,54,052

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 2,43,02,870
இந்தியா - 1,05,58,710
பிரேசில் - 84,56,705
ரஷியா - 35,44,623
இங்கிலாந்து - 33,57,361

Tags : United States , USA, Corona, Kills
× RELATED ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம்...