திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

வேலூர்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக காட்பாடியில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 1 மணியளவில் வீடு திரும்பினார். ஏற்கனவே கடந்த 4ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>