×

வீட்டு தோட்டம் அமைக்கும் பயிற்சி

பெங்களூரு: பெங்களூரு கப்பன் பூங்காவில் வீட்டு தோட்டம் அமைப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. பெங்களூரு கப்பன் பார்க் பகுதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகின்றன. அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பயனுள்ள பயிற்சிகளும் நடைபெறுகின்றன. இன்று காலை 8 மணி அளவில் வீட்டுதோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநில தோட்டக்கலை சார்பில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் சிறிய வயதினர் முதல் வயதான நபர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம் என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.


Tags : Home Gardening Training
× RELATED மார்ச் 9ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில்...