×

யானை தாக்கி விவசாயி பலி

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி, அத்தியூரை சேர்ந்தவர் பெரியசாமி (46) விவசாயி. இவர் தனது விளைநிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளார். இவரது உறவினர் சடையப்பனின் (50). விளைநிலமும் அருகருகே உள்ளதால், பயிர்களை பாதுகாப்பதற்காக நேற்று முன்தினம் இரவு இருவரும் காவலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை பெரியசாமியின் வயலுக்குள் நுழைந்த ஒற்றை யானை பயிர்களை சேதப்படுத்தியது. அதை விரட்ட முயன்ற இருவரையும் யானை துரத்தியது. பெரியசாமியை தும்பிக்கையால் பிடித்து கீழே போட்டு மிதித்தது. இதில், அவர் பரிதாபமாக இறந்தார். சடையப்பன் தவறி விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து யானையை விரட்டியடித்தனர்.


Tags : Periyasamy (46) is a farmer from Attiyoor, Kadampur hill area near Sathyamangalam in Erode district.
× RELATED மஞ்சள், இளஞ்சிவப்பு வண்ணத்தில் ஹைபிரிட் வகை காலிபிளவர் பயிரிட்ட விவசாயி