×

மூதாட்டி கொலை இருவர் கைது

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா மதுவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவம்மா. இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரிடம் இதே கிராமத்தை சேர்ந்த நஞ்சமணி என்பவர் ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றார். கடன் பெற்ற பணத்தை கொடுக்காமல் அட்சியமாக இருந்தார். இது விஷயமாக இவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இவர்களை கிராமத்தினர் சமதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் சிவம்மா வெளியே சென்றார். அப்படி சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று காலை கிராமத்தில் உள்ள கிணற்றில் பெண் சடலம் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாயமான சிவம்மா என்று தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நஞ்சமணியின் மகன் சிவு, இவரது நண்பர் ராஜி ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Two arrested for killing grandmother
× RELATED மூதாட்டி தற்கொலை