×

உரிய நிவாரணம் வழங்காத அரசை கண்டித்து விவசாயிகள் கருப்பு கொடி போராட்டம்: நாகை அருகே பரபரப்பு

நாகை:தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 2 புயல் மற்றும் பல்வேறு  காரணங்களால் கன மழை பெய்து வருகிறது. இதனால் நாகை மாவட்டத்தில் அறுவடைக்கு  தயாரான ஒரு லட்சம் ஏக்கருக்கு  மேல்  உள்ள சம்பா நெல் பயிர்கள்  சாய்ந்தது. நெல் பயிர்கள் நீரில் மிதக்கிறது. இந்நிலையில்  தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்காமல் குறைந்த அளவில் நிவாரணம் வழங்கி  வருகிறது. இதையடுத்து உரிய நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்தும்,  பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்கோரியும் நாகையை அடுத்த  வடக்குடியை சேர்ந்த விவசாயிகள், மழைநீரில் மூழ்கியுள்ள வயல்களில் கையில் கருப்பு கொடியுடன் இறங்கி போராட்டம் நடத்தினர்.  பாதிப்புகள் குறித்து முறையான கணக்கு எடுக்காத அதிகாரிகளை கண்டித்து  கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டது.

Tags : government ,Naga , Farmers black flag protest against government for not providing proper relief: agitation near Naga
× RELATED அரசு ஓய்வூதியர்கள் சார்பில் கருத்தரங்கம்