×

பிஎம் கேர்ஸ் நன்கொடை குளறுபடி ஓய்வு பெற்ற 100 ஐஏஎஸ், அதிகாரிகள் மோடிக்கு கடிதம்

புதுடெல்லி: கொரோனா உள்ளிட்ட பெரும் தொற்றின் போது ஏற்படும் செலவுகளை சமாளிக்க, பிரதமர் மோடி தலைமையில் ‘பிஎம் கேர்ஸ் நிவாரண நிதி’ திரட்டப்பட்டது. ஆனால், இந்த நிதியின் வரவு-செலவு குறித்த விவரங்களை வெளியிட அரசு மறுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட 100 பேர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், பிஎம் கேர்ஸ் நிவாரண நிதியின் வெளிப்படைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்றின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவ இந்த நிதி சேகரிக்கப்பட்டதில் இருந்து கண்காணித்து வருகிறோம். இந்த நிதி எதற்காக உருவாக்கப்பட்டது, இதனை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. பொது பொறுப்பின் கீழ் சந்தேகங்களை தவிர்க்க வரவு, செலவு குறித்த நிதி விவரங்களை அளிக்க வேண்டும்.  பிரதமரின் நிலைப்பாட்டுக்கும் தகுதிக்கும், அவருடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளிலும் முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Modi , Retired 100 IAS, officials letter to Modi on BM Cars donation mess
× RELATED நடுவழியில் பஞ்சரான தனது காருக்கு...