முக்கியமான நேரத்தில் கொரோனா தடுப்பூசி அளிக்கப்படுகிறது: அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி

சென்னை: சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்போலோ மருத்துவமனை வளாகத்தில், கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில், முதல் நபராக கொரோனா தடுப்பூசியை, அப்போலோ மருத்துவமனைகளின் குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி போட்டு கொண்டார். இதுகுறித்து, டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது: உலகையே ஸ்தம்பிக்க வைத்த, கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளில், இரண்டாம் கட்ட தொற்று பாதிப்பு அதிகரித்து, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சவாலான சூழலில், இந்தியாவில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு முக்கியமான நேரத்தில், தடுப்பூசி அளிக்கப்படுகிறது. மத்திய அரசு, மக்களுக்கு தேவையான நேரங்களில், பல தீர்க்கமான முடிவுகளை எடுத்து வருகிறது. அதேபோன்ற சூழலில், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. தேசம் சுகாதாரத்துறையின் பெருமைக்கொள்ளும் வகையில், ஒரு மைல்கல் சாதனையை அடைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>