×

தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது

சென்னை: தங்கம் விலை தொடர் சரிவு காரணமாக நேற்று ஒரு பவுனுக்கு 384 குறைந்து 37 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இது, நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன்பிறகு விலை குறைந்தாலும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விலை உயர்ந்தது. எனினும் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. அதன்பிறகு கடந்த வாரம் மீண்டும் விலை குறையத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது. 7ம் தேதி பவுனுக்கு 640 குறைந்து ஒரு பவுன் 38,440க்கும் விற்கப்பட்டது. 8ம் தேதி பவுனுக்கு ₹408 குறைந்து ஒரு பவுன் 38,032க்கு விற்கப்பட்டது. 9ம் தேதி தங்கம் விலை மேலும் சரிந்தது. கிராமுக்கு 54 குறைந்து ஒரு கிராம் 4,700க்கும், பவுனுக்கு 432 குறைந்து ஒரு பவுன் 37,600க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு 1,480 அளவுக்குகுறைந்தது.

பொங்கல் பண்டிகை மற்றும் திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் வந்த நிலையில் விலை குறைந்து வந்தது. நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால் சனிக்கிழமை விலையே விற்கப்பட்டது.  ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. கிராமுக்கு 38 குறைந்து ஒரு கிராம் 4,662க்கும், பவுனுக்கு 304 குறைந்து ஒரு பவுன் 37,296க்கும் விற்கப்பட்டது. இதையடுத்து தொடர்ச்சியாக 4 நாட்களில் பவுன் விலை 1,784 அளவுக்கு குறைந்துள்ளது. அதன்பிறகு 11ம் தேதி கிராம் 4,680 விற்கப்பட்ட நிலையில் பவுன் 37,440க்கு விற்கப்பட்டது. 12ம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றம் இல்லை. பின்னர் 13ம் தேதி கிராமுக்கு 18 குறைந்து கிராம் 4,662க்கும், பவுனுக்கு 144 குறைந்து ஒரு பவுன் 37,296க்கு விற்கப்பட்டது.அதன்பிறகு 14ம் தேதி பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டது.
பின்னர் 15ம் தேதி கிராமுக்கு 6 குறைந்து கிராம் 4,656க்கும், ஒரு பவுனுக்கு 48 குறைந்து பவுன் 37,248க்கு விற்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 16ம் தேதி கிராமுக்கு 48 குறைந்து ஒரு கிராம் 4,608க்கும் ஒரு பவுனுக்கு 384 குறைந்து 36,864க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து தங்கம் விலை பவுனுக்கு 384 குறைந்து பவுன் 37 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருப்பது தங்க நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெள்ளி விலைசற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 90 காசுகள் குறைந்து 69.70 ஆகவும், கிலோவுக்கு 900 குறைந்து 69,700 ஆகவும் உள்ளது.

Tags : Gold prices fell by 384 to 37,000 a pound yesterday due to a series of declines.
× RELATED ஏப்ரல்-18: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34க்கு விற்பனை