×

நார்வேயில் பயங்கரம்: தடுப்பூசி போட்ட 23 முதியோர் பலி

ஓஸ்லா: நார்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 முதியவர்கள் பலியாகி இருக்கும் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நோய்வாய்ப்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசியால் ஆபத்து ஏற்படக் கூடும் என நார்வே அரசு எச்சரித்துள்ளது. நார்வே நாட்டில் பொதுமக்களுக்கு அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசிகள் போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 முதியவர்கள் அடுத்தடுத்து இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களில் 13 பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக இருந்துள்ளனர்.
தடுப்பூசி போட்டதும் இவர்களுக்கு காய்ச்சல், அலர்ஜி உள்ளிட்ட ஒரே மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து நார்வே மருத்துவ இயக்குநர் மேட்சன் கூறுகையில், ‘‘பலவீனமான நோய்வாய்ப்பட்ட முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிய முடிகிறது. அவர்களால் சாதாரண பக்கவிளைவை கூட தாங்க முடியாது. ஆயுட்காலம் குறைவாக உள்ளவர்களுக்கும் தடுப்பூசியால் ஏற்படும் நன்மைகள் குறைவே. எனவே, பலவீனமான மற்றும் முதியவர்களுக்கு தடுப்பூசி போடும் முன்பாக தனிப்பட்ட முறையில் பரிசோதிக்க வேண்டும். அதே சமயம் வயதில் குறைந்தவர்களுக்கு இந்த எச்சரிக்கைகள் பொருந்தாது,’’ என்றார். இந்த சம்பவம் குறித்து பைசர் நிறுவனம் கூறுகையில், ‘‘இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் ஆபத்தான அளவுக்கு அதிகமானதாக இல்லை. இவை எதிர்பார்க்கப்பட்டதுதான்’’ என்றது. தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்கவிளைவுகள் என்பது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 19 லட்சம் பேரில் 21 பேருக்கு மட்டுமே அலர்ஜி ஏற்பட்டுள்ளது.

பிரான்சில் தடுப்பூசி போட்ட அடுத்த 2 மணி நேரத்தில் ஒரு முதியவர் இறந்தார். ஆனால் அவர் ஏற்கனவே பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும், தடுப்பூசியாவில் இறக்கவில்லை என்றும் பிரான்ஸ் மருத்துவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், 80 வயதை தாண்டிய முதியவர்கள், பலவீனமானவர்கள், வேறு பிற மருந்து, தடுப்பூசிக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசியை தவிர்ப்பதே சிறந்தது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருக்கும் நிலையில், இந்த சம்பவம் உலகிற்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஆய்விலிருந்து மாறுபட்டது ஏன்?
பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 95 சதவீதம் செயல்திறன் கொண்டதாக 3ம் கட்ட பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டது. ஆனால், இந்த மருந்து 80 வயதை தாண்டியவர்களுக்கு எதிர்பார்த்த அளவில் பலன் அளிக்கவில்லை என்பது மருந்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அந்நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘3ம் கட்ட பரிசோதனையில் பங்கேற்றவர்களின் சராசரி வயது 50 முதல் 55 ஆக மட்டுமே இருந்தது. தற்போது 80 வயதை தாண்டியவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால், எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகிறது. மற்றபடி, இளம் வயதினருக்கு பைசர் மருந்து நல்ல பலனை அளித்து வருகிறது’’ என்றனர்.

Tags : Norway ,kill , Terror in Norway: 23 elderly people vaccinated kill
× RELATED பொதுநலன் வழக்கு தொடர்ந்ததால் பயங்கரம்: வக்கீல் தம்பதி குத்திக்கொலை