எளாவூர் சோதனைசாவடியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின்பேரில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வரும் கார், லாரி, வேன், உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சிறப்பு ஆய்வாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசு பேருந்தை மடக்கிப்பிடித்து சோதனையில் ஈடுபட்டனர். அதில் 2 பேர் வைத்திருந்த பைகளில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், தேனி மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் (48), உத்தமபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (45) என தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைதுசெய்து ஆரம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு வந்தார். அவர்கள் நெல்லூரில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததாக கூறினர். பின்னர் அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories:

>