சொல்லிட்டாங்க...

தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை புறக்கணிக்கும் போக்கு தொடருமானால் மத்திய பாஜ அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

மத்திய அரசின் பணி நியமனங்களுக்கான அனைத்து தேர்வுகளையும் தமிழில் எழுதுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

இயற்கை இடர்பாடுகளால் அடுத்தடுத்து இழப்புகளை சந்தித்து பெரும் துயரில் வாடும் விவசாயிகளின் விவசாய கடன்களை தமிழக அரசு உடனே தள்ளுபடி செய்ய வேண்டும். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சேதாரங்கள் குறித்து கிராம நிலையில் இன்னும் முறையாக கணக்கெடுக்காத நிலையில் நிவாரணம் அறிவித்திருப்பது பாதிக்கப்பட்ட விவசாயிகளை மேலும் வஞ்சிப்பதாகும். - இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்

Related Stories:

>