×

கொரோனா தடுப்பூசி திட்டத்தின் முதல் நாள் வெற்றிகரமாக முடிந்தது: இதுவரை 1.65 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை..!

டெல்லி: நாடு முழுவதும் முதல் நாளில் 1,65,714 முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் 16,963 பேருக்கும், பீகாரில் 16,401 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாட்டில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் 12 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், 2 தடுப்பூசிகளுடன் நாடு முழுவதும் மொத்தம் 3,351 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.  

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை கூறுகையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் முதல் நாள்  வெற்றிகரமாக இருந்தது. தடுப்பூசிக்கு பிந்தைய மருத்துவமனையில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் 16,963 பேருக்கும், பீகாரில் 16,401 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Central Health Department , Corona, Vaccine, Federal Department of Health
× RELATED நாட்டில் 28 மாநிலங்களில் இதுவரை 28,252...