×

முதல் நாள் என்பதால் சில சிக்கல் இருந்தது: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை: விஜயபாஸ்கர் பேட்டி..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். நாளை முதல் முழுவீச்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக நாடு முழுவதும் 3,006 மையங்களில் சுமார் 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி படிப்படியாக போடப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வதற்கான கோவின் செயலியும் சரியாக இயங்கவில்லை என தகவல் வெளியானது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் தமிழகத்தில் 10 பிரபல மருத்துவர்கள், தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. முன்பதிவு செய்தவர்களை அடிப்படையாக கொண்டு 166 மையங்கள் தேர்வு செய்யப்பட்டது. மேலும், முதல் நாள் என்பதால் சில சிக்கல் இருந்தது. நாளை முதல் முழுவீச்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும். பின்னர், மத்திய சுகாதார அமைச்சருடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : anyone ,interview ,Vijayabaskar , Corona, Vaccine, Minister Vijayabaskar, Interview
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...