வரும் 23ம் தேதி கோவை வருகை ‘மெகா ரோடு ஷோ’ ராகுல் காந்தி பங்கேற்பு தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்..!

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வர  உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சியும் தேசிய தலைவர்களை கொண்டு பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் ‘மெகா ரோடு ஷோ’ பிரசாரம் மூலம் மக்களை கவரும் வகையில் பிரசார சுற்றுப்பயணத்தில் ராகுல்காந்தியை பங்கேற்கும்படி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் ஆகியோர் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தி அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

இதற்கிடையில், ராகுலின் தமிழ் வணக்கம் என்ற நிகழ்ச்சியில் அவனியாபுரத்தில் பங்கேற்று ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து மகிழந்தார். அது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அவரும் அடுத்தகட்டமாக 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்தில் கலந்துகொள்வதாக உறுதியளித்தார். அதன்படி, வரும் 23ம் தேதி கோவை வருகிறார். அதன்பிறகு ‘மெகா ரோடு ஷோ’ மூலம் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

கோவையில் இருந்து புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக செல்கிறார். அங்கு நெசவாளர்களை சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு தாராபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

மேலும் 2வது நாளாக கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும், 3வது நாளாக மதுரையில் நடைபெறும் மெகா ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: