கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா : உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 2.50 கோடியை நெருங்கியது!!

ஜெனீவா:சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 218 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனா வைரஸ் உருமாறி மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 9 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 437 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 683 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 16 ஆயிரத்து 69 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 6 கோடியே 72 லட்சத்து 99 ஆயிரத்து 119 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா - 1,42,11,188

இந்தியா - 1,01,62,738

பிரேசில் - 73,61,379

ரஷியா - 29,09,680

துருக்கி - 22,46,047

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 4,01,469

பிரேசில் - 2,08,291

இந்தியா - 1,51,918

மெக்சிகோ - 1,37,916

இங்கிலாந்து - 87,295

இத்தாலி - 81,325

பிரான்ஸ் - 69,949

ரஷியா - 64,495

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 2,40,76,309

இந்தியா - 1,05,27,683

பிரேசில் - 83,94,253

ரஷியா - 35,20,531

இங்கிலாந்து - 33,16,019

Related Stories: