1500 பணத்துக்காக ஆபாசமாக பேட்டி அளித்த பெண்ணை கைது செய்யாதது ஏன்? சமூக ஆர்வலர்கள் கேள்வி

சென்னை: சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் 2019ம் ஆண்டில் இருந்து இருந்து செயல்பட்டு வருகிறது. தங்களது சேனலை அதிக பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக பெண்களிடம் ஆபாசமாக கேள்வி ேகட்டு, பேட்டியை எடுத்து ஒளி பரப்பியுள்ளனர்.  இதுபோல் 200 வீடியோக்களை தங்களது சேனலில் ஒளிபரப்பி உள்ளனர். இந்த யூடியூப் சேனல் பேட்டியை சுமார் 7 கோடி பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம் அந்நிறுவனத்துக்கு அதிக அளவில் பணம் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த வாரம் சென்னை சாஸ்திரிநகர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சாஸ்திரி நகர் போலீசார் 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ் (31), நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆசின்பாட்சா (23), கேமராமேன் அஜய்பாபு (24) ஆகியோரை கைது செய்தனர். மேலும் சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் அலுவலகத்தை சீல் வைக்கவும், அதை முடக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் புகார் அளித்த பெண் மற்றொரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலில் இருந்து தொடர்பு கொண்டு ரூ.1500 பணம் தருகிறோம். இது போன்று ஆபாசமாக பேச வேண்டும் என்று கூறினர். பணம் கொடுத்து பேசும் படி கூறியதால் தான் இப்படி பேசினேன். இதைப்போன்று நிறைய பெண்கள் பணம் வாங்கி கொண்டு ேபசியுள்ளனர். மேலும் இதை வேறு எந்த சேனலில் ஒளிபரப்ப மாட்டோம் என்று கூறியதால்தான் அப்படி பேசினேன். அதன்பிறகு இந்த வீடியோவை பார்த்து என்னுடைய குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதைடுத்து தான் போலீசில் புகார் அளித்தேன் என்றார்.  இந்நிலையில் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:

அவரது பேட்டி மற்ற பெண்களை பேட்டி கொடுக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது. அவரது பேட்டி மிகவும் ஆபாசமாக உள்ள நிலையில் போலீசார் அவரை இதுவரை ஏன் கைது செய்யாதது ஏன் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவரை போன்று எத்தனை பெண்கள் இதுபோன்று பணத்தை வாங்கிக் கொண்டு ஆபாசமாக பேசியுள்ளனர் என்று விசாரணை நடத்த வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு சட்டத்தில் ஆண்கள், பெண்கள் என்று வேறுபாடு கிடையாது. இதனால் பேட்டி கொடுத்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: