பேஸ்புக் சிங்கள அரசின் கைக்கூலி: வைகோ கடும் கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த, முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை, சிங்கள இனவெறி ராணுவம் இரவோடு இரவாக இடித்துத் தகர்த்துத் தரை மட்டம் ஆக்கியதைக் கண்டித்து, சென்னையில் உள்ள சிங்கள இனவெறி துணைத் தூதரகத்தின் முன்பு மதிமுக மற்றும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கடந்த 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற,  சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் கலந்து கொண்டு கருத்து உரை ஆற்றினர், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  அந்த ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையை, சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக, பலரது முகநூல் கணக்குகளை, அந்தத் தளம் முடக்கி இருக்கின்றது. சிங்கள இனவெறி அரசின் கைக்கூலி ஆகி இருக்கின்ற முகநூல், உலகம் முழுமையும் வாழ்கின்ற பத்துக் கோடித் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றது.   எனவே, முகநூல் அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்ய வேண்டும். முகநூலின் தான்தோன்றித்தனமான போக்கைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: