சபரிமலையில் மகரஜோதி பார்த்து பக்தர்கள் பரவசம்

திருவனந்தபுரம்: மகரவிளக்கு  கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் 30ம் மாலை  திறக்கப்பட்டது. 31ம் ேததி முதல் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தினமும் 5 ஆயிரம்  பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மகர ேஜாதி  தரிசனம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதிலும், 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணைத்தை மாலை 6.30 மணியளவில்   ஐயப்பன் விக்ரகத்துக்கு அணிவிக்கப்பட்டது.  பிறகு, 6.40 மணியளவில்  சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த சமயத்தில் பொன்னம்பல மேட்டில் 3 முறை  மகர ஜோதி தரிசனம் தெரிந்தது.

வழக்கமாக, மகர ஜோதி  தரிசனத்திற்கு சபரிமலையில் பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள். இந்த  வருடம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலையில் பெரும்பகுதி வெறிச்சோடி  காணப்பட்டது. பிறகு, இரவு 9 மணியளவில் கோயில் நடை  சாத்தப்பட்டது.

வரும் 19ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். அன்றிரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.  18ம்  தேதியுடன் நெய்யபிஷேகம் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்,  20ம் தேதி காலை 6.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்று பக்தர்கள்  தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. அன்றுடன் மண்டல, மகர விளக்கு பூஜை காலம்  நிறைவடையும்.

Related Stories: