×

இந்தியாவின் பொறுமையை யாரும் சோதித்து விடாதீர்கள்: சீனாவுக்கு நரவானே மறைமுக எச்சரிக்கை

புதுடெல்லி: ‘‘இந்தியாவின் பொறுமையை சோதிக்கும் தவறை யாரும் செய்து விடாதீர்கள்,’ என்று பாகிஸ்தான், சீனாவுக்கு இந்திய ராணுவ தளபதி நரவானே மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்  இந்திய 73வது ராணுவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னம் பகுதியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். பின்னர், நரவானே அளித்த பேட்டியில் கூறியதாவது:  எல்லையில் ஒருதலைப்பட்சமாக மாற்றங்களை மேற்கொள்வதற்கான சதிக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.  கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள்  செய்த உயிர் தியாகம், ஒரு போதும் வீணாகாது. பிரச்னைகளை பேச்சுவார்த்தை, அரசியல் முயற்சிகள் மூலமாக தீர்ப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ஆனால், ஒருவரும் இந்தியாவின் பொறுமையை சோதித்து பார்க்கும் தவறை செய்து விடாதீர்கள்.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக்கான எந்த ஒரு அச்சுறுத்தலையும் இந்திய ராணுவம் அனுமதிக்காது.  மற்றொரு எல்லையில் எதிரிக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து பாதுகாப்பான புகலிடத்தை அளித்து வருகின்றது. எல்லைக்கட்டுப்பாடு கோடு எதிரே பயிற்சி மையத்தில் 300-400 தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு தயாராக இருக்கின்றனர். கடந்த ஆண்டு பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. டிரோன்மூலம் ஆயுதங்–்கள் கடத்துவதற்காக முயற்சிகளும் நடக்கிறது.

அணிவகுப்பில் முதல்முறையாக டிரோன்கள்
இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள கரிப்பா மைதானத்தில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில், ராணுவ வரலாற்றில் முதல் முறையாக டிரோன்களின் அணிவகுப்பும் நடந்தது. மேலும், டிரோன்களின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களும், உதவி பொருட்களை வழங்குவதற்கு பயன்படுத்துவது குறித்தும் ஒத்திகைகள் செய்து காட்டப்பட்டன. இதில், ராணுவத்துக்கு சொந்தமான 75 டிரோன்கள் பங்கேற்றன.



Tags : India ,China , Let no one test India's patience: Nervous indirect warning to China
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...