பொங்கல் பண்டிகைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொண்டர்கள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து பெற்றனர். அப்போது, கலைஞர் வழியில் பொங்கல் பண்டிகைக்கு தன்னை சந்திக்க வந்த தொண்டர்களுக்குகு புத்தம் புதிய 20 ரூபாய் நோட்டு வழங்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.   கலைஞர் கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அந்த நாளில் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து பெறுவதற்காக அவரை சந்திப்பதுயும் வழக்கமாக இருந்தது. கோபாலபுரம் இல்லத்தில் குவியும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தன் கையால் புத்தம் புது பத்து ரூபாய் நோட்டை கொடுத்து வாழ்த்துவார். அதை பெறுவதற்கு திமுகவினர் மத்தியில் கடும் போட்டி நிலவும். அவர் கையால் கிடைக்கும் அந்த புத்தம் புதிய பத்து ரூபாய் நோட்டை பலர் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துள்ளனர். சிலர் அதை பிரேம் போட்டு வீடுகளில் மாட்டி வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் மீது அளவிட முடியாத பாசம் வைத்திருந்தனர்.

 தற்போது அவரது மறைவுக்கு பிறகு திமுக தலைவராக பதவி வகித்து வரும் மு.க.ஸ்டாலினும், அவர் பொறுப்பேற்ற பின்பு கலைஞர் கருணாநிதியின் வழியில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் அவரை சந்திக்க வந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விஐபிக்களுக்கு புத்தம் புதிய 20 ரூபாய் நோட்டு வழங்கினார்.  நேற்று முன்தினம் காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர்கள் தா.மோ.அன்பரசன், சுந்தர், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மயிலை வேலு, சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், இளைய அருணா, கோவிந்தராஜ், ஆவடி நாசர், பூபதி மற்றும் நிர்வாகிகள் வருகை தந்தனர். அவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு புத்தம் புதிய 20 ரூபாய் நோட்டை வழங்கி வாழ்த்தினார்.

 இதேபோன்று திமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 400க்கும் மேற்பட்டோர் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரும் அவரிடம் 20 ரூபாய் நோட்டு வாங்கி வாழ்த்து பெற்றனர். கொரோனா பரவல் காரணமாக வெளியூரில் இருந்து நிர்வாகிகளோ, தொண்டர்களோ வர வேண்டும் என்றும் கட்சி தலைமை சார்பில் கேட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் கலைஞர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார், பிறகு கோபாலபுரம் கலைஞர் இல்லத்திற்கு சென்று அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவராக பதவி வகித்து வரும் மு.க.ஸ்டாலினும், அவர் பொறுப்பேற்ற பின்பு கலைஞர் கருணாநிதியின் வழியில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் அவரை சந்திக்க வந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விஐபிக்களுக்கு புத்தம் புதிய 20 ரூபாய் நோட்டு வழங்கினார்.

Related Stories: