மமுஜூ: இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 34 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோளில் 6.2 புள்ளிகளாக பதிவானது. மமுஜி மாவட்டத்தின் தென் மேற்கே 36 கிமீ தொலைவில் 18 கிமீ ஆழத்தில் இதன் மையம் இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்தன. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் மற்றும் அதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பொதுமக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி கூக்குரலிட்டனர். பாதிக்கப்பட்ட் பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மமுஜி மாவட்டத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. இதேபோல், மஜினே மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.