மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் பொங்கல் விழா

மதுராந்தகம்:  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.   செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி சார்பில்  பொங்கல் விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் மோமன் சிங் முன்னிலை வகித்தார். கல்லூரி நிர்வாக அலுவலர் லிங்கநாதன்வரவேற்றார். கல்லூரி தாளாளர்  கோ.ப.அன்பழகன்  தலைமை தாங்கி, பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவிகள் பாரம்பரியபுடவை அணிந்து, கல்லூரி வளாகத்தின்  விளையாட்டு மைதானத்தில் 25 மண் பானைகளில் பொங்கல் வைத்தனர். பின்னர், மாட்டு வண்டி, குதிரை வண்டி ஆகியவற்றில் பயணம் செய்தனர். மேலும், கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர். இறுதியில்,  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories:

>