நூறு கரும்புகளால் உருவான பொங்கல் பானை: காஞ்சிபுரம் விவசாயி அசத்தல்

காஞ்சிபுரம்: நூறு கரும்புகளை வைத்து பொங்கல் பானை தயாரித்து, விவசாயி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. தற்போது செந்தில்குமார், வாழ்நாள் முழுவதும் உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளை போற்றியும், விவசாயிகளின் செயல்களை பொதுமக்கள் உணர வேண்டியது குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார். இதையொட்டி, 12 அடி உயரத்தில் 100 முழு கரும்புகளை கொண்டு, பொங்கல் பானையை உருவாக்கி, அதன்முன் குடும்பத்துடன் சூரியனுக்கு பொங்கலிட்டு தமிழ் பாரம்பரியம் மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். நூறு முழு கரும்பு கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பொங்கல் பானை முன்பு அப்பகுதி பொதுமக்களும், அவ்வழியாக சென்றவர்களும், அந்த கரும்பு பானையின் முன்பு நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். அங்கு வந்தவர்களுக்கு, சர்க்கரை பொங்கல் மற்றும் பழவகைகள் வழங்கப்பட்டன.

Related Stories:

>