தூய்மை நகரத்திற்கான தரவரிசை சென்னைவாசிகள் கருத்து தெரிவிக்கலாம்

சென்னை: தூய்மை இந்தியா திட்டத்தின் படி 2016ம் ஆண்டு முதல் தேசிய அளவில் தூய்மை நகர கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டும் தூய்மை நகர கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இதில் பொதுமக்களின் கருத்துக்கு 1,400 மதிப்பெண்கள் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களின் கருத்துகளை மார்ச்  31 ம் தேதி வரை தெரிவிக்கலாம். இதன்படி பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1969 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிவிக்கலாம். மேலும் ,www.swachhsurvekshan2021.org/citizenfeedback என்ற இணையதள முகவரி, தூய்மைக்கான செயலியிலும் (Swachhata App)) மற்றும் SS2021 VoteForYourCity  என்ற செயலியிலும்  தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம்.  எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>