×

துபாய் விமானத்தில் தங்கம் கடத்தல்

சென்னை:  துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் சங்கர் (21) என்ற பயணியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. சோதனையில், அவருடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 722  கிராம் தங்க பேஸ்ட்டை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.36.52 லட்சம்.
இதையடுத்து பயணியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.    
Tags : Dubai ,flight , Gold smuggling on Dubai flight
× RELATED துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சி பறிமுதல்