சு.வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய அரசு கடிதம்: அஞ்சல் துறை தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்

சென்னை: அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத முடியுமெனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அஞ்சல் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என்று சு.வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து கூறுகையில்: எனது கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. என்னுடைய கோரிக்கையால் தமிழில் தேர்வுகள் நடைபெறுவது தேர்வர்களுக்கு ஒரு ”சமதள ஆடு களத்தை” ஏற்படுத்தித் தருவதாகும். அதைபோன்று அஞ்சல் துறையில் கணக்கர் வேலைக்கு  நடக்கவிருக்கும் தேர்வு ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டும் நடைபெறும் என கடந்த 4ம் தேதி மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அத்தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் 7ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அக்கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு அஞ்சல் துறை கணக்கர் தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று அறிவித்துள்ளது.

Related Stories: