மூதாட்டியை தாக்கி 10 சவரன், பணம் கொள்ளை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சி நடுகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் தேவராஜ் (42)  இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் இருந்துள்ளனர். அவர்களை பொங்கல் பண்டிகைக்காக அழைத்துவர தேவராஜ் சென்றார்.  அப்போது வீட்டில் தேவராஜின் தாயார் சாரதா ( 65)  தனியாக  இருந்துள்ளார்.  இந்நிலையில் இரவு 11 மணிக்கு கதவை தட்டுவது போல் சாரதாவுக்கு சத்தம் கேட்டுள்ளது இதையறிந்த சாரதா கதவை திறந்து வெளியே பார்த்தபோது யாரும் இல்லை. பின்னர் யாரும் இல்லை என்று நினைத்து கதவை மூடுவதற்குள்  மர்ம நபர்கள் மூதாட்டியின் தலையில் துணியை மூடி அவரை அடித்து வீட்டில் இருந்த கட்டிலில் கட்டிப்போட்டு பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ 40 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவைகளை திருடிச்சென்று விட்டனர். புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories:

>